வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (25/07/2017)

கடைசி தொடர்பு:19:24 (26/07/2017)

அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஜோகோவிச்..?

டென்னிஸ் உலகின் நட்சத்திர ஆட்டக்காரரான நோவாக் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜோகோவிச்

செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச் டென்னிஸ் உலகில் தலை சிறந்து விளங்கும் முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதுவரையில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க டென்னிஸ் ஓபன் தொடரில் பங்கேற்கமாட்டார் என்றே தெரிகிறது. 

இது குறித்து ஜோகோவிச்சின் மருத்துவர் ஸ்தேங்கோ மிலின்கோவிச் கூறுகையில், ‘நோவாக் ஜோகோவிச்சிற்கு முழங்கை காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஜோகோவிச் பங்கேற்க முடியாமல் போகலாம். மிகுதியான பயிற்சியும் ஜோகோவிச்சின் காயத்துக்குக் காரணமாகிவிட்டது. அவரின் காயங்கள் தற்போது குணமாகி வருவதால் அவர் விரைவில் களம் இறங்குவார்’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ஜோகோவிச் முன்னதாக நடந்த விம்பிள்டன் தொடரிலிருந்து இதே காயம் காரணமாக காலிறுதியிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ’காயங்களிலிருந்து மீண்டு ஜோகோவிச் மீண்டும் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பைத் தர வேண்டும்’ என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

- காவ்யா ஜ, மாணவப் பத்திரிகையாளர்.