'என்னை இதுதான் பெருமைப்பட வைக்கிறது...'- அணியினர் குறித்து மனம் திறந்த கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி, டெஸ்ட் தொடர் விளையாட இலங்கை சென்றுள்ளது. இதையொட்டி இந்திய அணியின் கேப்டன் கோலி, தொடர் தொடங்குவதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

விராட் கோலி

அப்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றிக்கும் முதலிடத்தில் நீடிப்பதற்கும் என்ன காரணம் என்ற கேள்விக்கு, 'எங்கள் அணியைப் பொறுத்தவரை, இளம் வீரர்கள் கூட அவர்களின் பொறுப்பை உணர்ந்து களத்தில் விளையாடுகிறார்கள். இதனால், அணியில் ஒருவருக்கொருவர் பழகுவது நன்றாக இருக்கிறது. இந்த நட்புணர்வுதான் என்னை ஒரு கேப்டனாக மிகவும் பெருமை கொள்ள வைக்கிறது. நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். மற்றவர் ஆட்டத்தை மிகவும் ரசிக்கிறோம். மற்றவர்களோடு விளையாடவும் பெருமை கொள்கிறோம். ஆட்டத்தின் மிகவும் கடுமையான கணங்களிலும் எங்களால் சாதித்துக் காட்ட முடியும் என்று நம்புகிறோம். இதனால்தான், மிகவும் கடினமான தருணங்களிலிருந்தும் வெளிவந்திருக்கிறோம். இதற்குக் காரணம் நாங்கள் ஒருவருக்கொருவரை நம்புவதுதான். கிரிக்கெட் திறமையை விட இந்த விஷயம்தான் அணியைப் பொறுத்தவரை, ஒரு கேப்டனாக எனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயமாகும்' என்று நெகிழ்ச்சி ததும்ப கூறியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!