சுறாவோடு நீச்சலில் மோதிய பிரபல நீச்சல் வீரர் பெல்ப்ஸ்

அமெரிக்காவின் பிரபல நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், கடலில் வெள்ளைச் சுறாவோடு நீச்சல் போட்டியில் மோதியுள்ளார்.


பெல்ப்ஸ், நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்தவர். 2008-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மட்டும் மொத்தம் 8 தங்கப் பதக்கங்களை வென்று உலக சாதனை படைத்தவர். ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்றவர், அதிக தங்கப் பதக்கங்களை வென்றவர் என்ற சாதனைகளுக்கு இவர்தான் சொந்தக்காரர். டிஸ்கவரி டி.வி நிறுவனம், 'சுறா வாரம்' எனக் கடைபிடித்தது. சுறா வேட்டையிலிருந்து காப்பதற்கு, விழிப்புஉணர்வாக இது கொண்டாடப்படுகிறது. இந்த சுறா வாரத்தின் கடைசி நாளில், ஒலிம்பிக் நாயகன் பெல்ப்சும் வெள்ளைச் சுறாவும் கடலில் நீச்சல் போட்டியில் இறங்கினர்.

100 மீட்டர் நீச்சல் போட்டி தென்னாப்பிரிக்க கடலில் நடந்தது. தென்னாப்பிரிக்காவின் அந்தக் கடல் பகுதி  சுறாக்களின் உலகம் என்று அழைக்கப்படும் பகுதி ஆகும். இந்தப் போட்டியில், சுறா 36.1 விநாடிகளில் இலக்கைக் கடந்தது. பெல்ப்ஸ் குறிப்பிட்ட 100 மீட்டரை கடக்க 38 விநாடிகள் எடுத்துகொண்டார். இந்தப் போட்டியில் சுறா 2 விநாடிகள் முன்னிலையுடன் வெற்றிபெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!