இந்தியா Vs இலங்கை: முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்!

ந்தியா - இலங்கைக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, இன்று காலே மைதானத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை,  நீண்ட நாள்களாக தோல்வியே காணாத வலுவான அணியாக இந்தியா திகழ்கிறது. எனவே, இந்த டெஸ்ட் தொடரையும் வென்று கோலி சாதிப்பார் என எதிர்பார்க்கலாம். ஆனால், இலங்கை அணி கொஞ்சம் பலவீனமாகவே காணப்படுகிறது. ஜிம்பாப்வே உடனான ஒருநாள் தொடர் தோல்வி, சொதப்பலான டெஸ்ட் சீரிஸ் எனக் கொஞ்சம் தள்ளாடிவருகிறது. இருந்தாலும் இலங்கையை கோலியின் படை குறைத்து மதிப்பிடாது என நம்பலாம்.

இந்திய அணி

இந்திய அணியின் முரளி விஜய் மற்றும் ராகுல், இருவருமே அணியில் இடம்பெறாதது சிறிய பின்னடைவுதான். இந்நிலையில், ராகுலின் இடத்தை தமிழக வீரர் முகுந்த் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். புஜாராவும் சாஹாவும் நீண்டநாள்கள் கழித்து ஆடவிருக்கின்றனர். ஹர்திக் பாண்டியாவும் இந்தமுறை ஆடும் லெவனில் இடம்பிடித்து, ஆல்ரவுண்டராகக் கலக்க வாய்ப்பிருக்கிறது. இலங்கையின் சுழல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கும் விதமாக, அஷ்வின் - ஜடேஜா கூட்டணி பிரகாசிக்கலாம். ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிடலாம் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- கீ.இரா.கார்த்திகேயன் 
 (மாணவப் பத்திரிகையாளர் )

Do you like the story?

Please Appreciate the Author by clapping!