நாடு திரும்பிய இந்திய மகளிர் அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

இந்திய மகளிர் அணி, உலகக் கோப்பைத் தொடரை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை நாடு திரும்பியது. 

indian womens team

Photo Courtesy : ANI

மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் கோப்பையைப் பறிகொடுத்தது. இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தோற்றாலும், அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டது. இந்திய அணி வெற்றிபெற்றதுபோல வாழ்த்துகள் குவிந்தன. இந்தியப் பிரதமர், பல அரசியல் தலைவர்கள், முன்னாள் இந்நாள்  கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் இந்திய மகளிர்  அணியைக் கொண்டாடினார்கள்.
அதற்கு முக்கியக் காரணம், அவர்கள் விளையாடிய விதம். இந்தியாவில், தோனி, கோலி எனப் பேசிக்கொண்டிருந்தவர்களை மித்தாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர், மந்தானா, தீப்தி ஷர்மா எனப் பேசவைத்துவிட்டது இந்தத் தொடர். இதன்மூலம் இந்திய மகளிர் அணிக்கும் மிகப் பெரிய வெளிச்சம் கிடைத்துள்ளது. இப்படி இந்திய மகளிர் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்ற இந்திய அணி, இன்று அதிகாலை நாடு திரும்பியது. ரசிகர்கள் பெருமளவில் மும்பை விமான நிலையம் முன் கூடி, அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். லண்டனிலிருந்து புறப்படும் முன்பு, அங்குள்ள இந்திய இல்லத்தில் இந்திய மகளிர் அணியை அழைத்து கௌரவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!