வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (26/07/2017)

கடைசி தொடர்பு:14:18 (26/07/2017)

மித்தாலி ராஜ் குறித்து நெகிழும் சானியா மிர்சா!

மித்தாலி ராஜ்... சமீபத்தில் கிரிக்கெட் உலகில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர், பெண்கள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்துள்ளார். சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரிலும், இந்திய அணியை இறுதிப் போட்டி வரை கொண்டுச் சென்றதில் இவரின் பங்கு அதிகமானது. இந்த உலகக் கோப்பைத் தொடரின்போதும் அவர் புரிந்த மகத்தான சாதனைகளுக்காகப் பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

சானியா மிர்சா

இந்நிலையில், உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும், 'மித்தாலி ராஜ் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுத்துச் செல்ல அவர் மிகச் சிறந்த தூதராக இருப்பார்' என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

உலகக் கோப்பை இறுதிப் போட்டிவரை முன்னேறி நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய மகளிர் அணி, இன்று நாடு திரும்பினர். அவர்களுக்கு ரசிகர்களால் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும், இன்னும் ஓரிரு தினங்களில் பிசிசிஐ சார்பில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.