வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (27/07/2017)

கடைசி தொடர்பு:21:34 (27/07/2017)

அர்ஜூனா விருது வழங்கும் குழுவில் இடம்பெற்ற சேவாக் மற்றும் பி.டி.உஷா

கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் பி.டி.உஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 


அர்ஜூனா, கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகளை வழங்குவதற்கு 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.தாகூர் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் பி.டி.உஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். புலேல கோபிசந்த் மற்றும் பங்கஜ் அத்வானி ஆகியோர் துரோணாச்சாரியா மற்றும் தயான்சந்த் விருதுகளுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பன்னிரண்டு பேர் கொண்ட குழுவில், முகுந்த் கிலேகர், சுனில் டப்பாஸ், எம்.ஆர்.மிஸ்ரா, எஸ்.கண்ணன், சஞ்சிவ் குமார், லதா மாதவி, அனில் கண்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு 1961-ம் ஆண்டு முதல் அர்ஜூனா விருது வழங்கப்பட்டு வருகிறது.