வெளியிடப்பட்ட நேரம்: 05:06 (28/07/2017)

கடைசி தொடர்பு:07:49 (28/07/2017)

இந்திய மகளிர் அணியினருடன் பிரதமர் சந்திப்பு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைத் தொடரில், இறுதி ஆட்டம் வரை சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் நமது மகளிர் அணியின் முயற்சியை அனைவரும் பாராட்டினர். 

Indian women's team with modi


பிரதமர் மோடி தொடங்கி, பல அரசியல் தலைவர்களும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, நாடு திரும்பிய இந்திய மகளிர் அணியினருக்கு ரசிகர்கள் ஆடிப்பாடி பெரும் வரவேற்பு அளித்தனர். இந்திய ரயில்வே துறை,  மகளிர் அணி வீராங்கனைகளுக்கு தலா 13 லட்ச ரூபாய் பரிசுத்தொகையாக அறிவித்தது.

 இந்நிலையில், நேற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய மகளிர் அணியினரைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இந்திய மகளிர் அணியினர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், வீராங்கனைகள் மட்டுமன்றி இந்திய மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.  மகளிர் அணியினர், தாங்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை மோடிக்கு பரிசாக அளித்தனர்.