உலக வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை பவானி நாடு திரும்பினார்!

சர்வதேச வாள்வீச்சு (பென்சிங்) போட்டியில் முதல்முறையாக இந்திய வீராங்கனை ஒருவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு.

bhavani
 

கடந்த மே மாதம் ஐஸ்லாந்து நாட்டில் சர்வதேச வாள்வீச்சுப் போட்டியான சாட்டிலைட் உலகக் கோப்பை (வைகிங் கோப்பை) வாள்வீச்சு போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சி.ஏ.பவானிதேவி இந்தியா சார்பில் ’சேபர்’ பிரிவு போட்டியில் பங்கேற்றார். இறுதிப் போட்டியில் பிரிட்டன் வீராங்கனையுடன் மோதிய பவானிதேவி, கடுமையாகப் போராடி 15-13 என்ற புள்ளி வித்தியாசத்தில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றார். சர்வதேச வாள்வீச்சுப் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றது இதுவே முதல்முறை. 

bhavani
 

தங்க வென்ற கையோடு பவானிதேவி நாடு திரும்பவில்லை. பல்வேறு நாடுகளில் மேலும் பல போட்டிகளில் பங்கேற்று சர்வதேச அளவில் தன் ரேங்கிங்கை 81லிருந்து 36க்கு உயர்த்தி இன்று சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி, தலைமைச் செயலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!