புரோ கபடி; தெலுங்கு டைட்டன்சுடன் மோதும் தமிழ் தலைவாஸ்

புரோ கபடி ஐந்தாவது சீசன் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 28 முதல் அக்டோபர் 28 வரை புரோ கபடி. லீக் தொடர் நடக்கவிருக்கிறது. இன்று நடக்கும் அறிமுக விழாவில் சச்சின் டெண்டுல்கர், மிதாலி ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகம்  சார்பில் தமிழ் தலைவாஸ் அணி முதல்முறையாக புரோ கபடி லீக்கில் கலந்து கொள்கிறது. 

புரோ

ஐதாராபாத்திலுள்ள கச்சிபோலி கபடி ஸ்டேடியத்தில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணியும் தமிழ் தலைவாஸ் அணியும் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் யு மும்பை அணியுடன் புனே அணி மோதுகிறது.

ராகுல் சவுதாரி தலைமையில் தெலுகு டைட்டன்ஸ் விளையாடுகிறது. தமிழ் தலைவாஸ் அணிக்கு அஜய் தாகூர் தலைமை தாங்குகிறார். புரோ கபடியைப் பொறுத்தவரை மிகச்சிறந்த ரெய்டர்களில் முக்கியமானவர் ராகுல் சவுதாரி. தெலுகு டைட்டன்ஸ் அணி மிகவும் வலுவாகவே இருக்கிறது. தமிழ் தலைவாஸ் அணியில் அனுபவமற்ற வீரர்களே நிறைந்திருக்கின்றனர். கேப்டனையும் பயிற்சியாளரையுமே பெரிதும் நம்பியிருக்கிறது தமிழ் தலைவாஸ். இன்று நடக்கும் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீரர்கள் நிறைந்துள்ள தமிழக அணியை வழிநடத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார் அஜய் தாகூர். தமிழ் தலைவாஸ் அணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்திருக்கிறார் ராகுல் சவுதாரி. அறிமுகப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி சாதிக்குமா இல்லையா என்பதை இன்று பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!