சித்ராவை அனுமதிக்கக் கோரிய இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு..!

'உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் கலந்துகொள்ள, பி.யூ.சித்ராவை அனுமதிக்க வேண்டும்' என்ற இந்தியாவின் கோரிக்கையை சர்வதேச தடகள சம்மேளனம் நிராகரித்தது. 

சித்ரா


ஆசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில், பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பி.யூ.சித்ரா தங்கப்பதக்கம் வென்றவர். அவர், நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் தனக்கு இடமளிக்கவில்லை எனக் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், 'தடகளப் போட்டிக்கு சித்ராவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துமாறு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், இந்தியத் தடகள சம்மேளனத்துக்கு அறிவுறுத்தினார்.

அதையடுத்து, சித்ராவை போட்டியில் அனுமதிக்குமாறு இந்தியத் தடகள சம்மேளனம், சர்வதேச தடகள சம்மேளனத்துக்கு கோரிக்கை வைத்தது. ஆனால், இந்தியாவின் கோரிக்கையை சர்வேதேச சம்மேளனம் நிராகரித்தது. 'ஆசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றது மட்டும் சர்வதேச தடகளப் போட்டியில் பங்குபெறப் போதுமானது இல்லை' என்று சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!