’இன்னும் நாலு தம்பி, தங்கை வேண்டும்’ - அடம் பிடிக்கும் ரொனால்டோவின் மூத்த மகன்!

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ இன்னும் திருமணம் புரிந்து கொள்ளவில்லை. எனினும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். முதல் மகன் கிறிஸ்டியானோ ஜுனியர் மட்டுமே அவரின் காதலிக்குப் பிறந்தவர். கிறிஸ்டியானோ ஜூனியரின் தாயார் பெயர் வெளியிடப்படவில்லை. ரொனால்டோவுக்கு அண்மையில் பிறந்த இரட்டைக்குழந்தைகள் அமெரிக்காவைச் சேர்ந்தவர் வாடகைத் தாய்.

ரொனால்டோவுடன் மூத்த மகன்

போர்ச்சுகல் மற்றும் ரியல்மாட்ரிட் அணிகளுக்காக விளையாடும் போது, ஏழாம் எண் ஜெர்சி அணிந்துதான் ரொனால்டோ விளையாடுவார். ஏழாம் எண் அவரின் லக்கி நம்பர். கால்பந்து உலகில் ரொனால்டோவை 'CR7 ' என்பார்கள். ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ, ஜெர்சி எண்ணுக்குப் பொருத்தமாக வீட்டில் 7 சகோதர- சகோதரிகள் வேண்டுமென்று ஆசைப்படுகிறாராம். அதனால், மகனின் ஆசையைப் பூர்த்தி செய்யும்விதத்தில் தன் குழந்தைகளின் எண்ணிக்கையை ஏழாக உயர்த்த ரொனால்டோ திட்டமிட்டுள்ளார். 

ரொனால்டோவின் தற்போதையை காதலி ஜார்ஜினியா ரோட்ரிகஸ் கர்ப்பமாகியிருக்கிறார். விரைவில் ரொனால்டோவின் வீட்டில் 4வது குழந்தை தவழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே ரொனால்டோவின் விருப்பம் என்று போர்ச்சுகல் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ ‘எனக்குமொத்தம் ஏழு சிப்லிங்ஸ்(தம்பி/ தங்கை) வேண்டும். ஏழு தான் மேஜிக் நம்பர்’ என்று அடம்பிடிப்பதாக நாளிதழ் ஒன்றுக்கு ரொனால்டோ பேட்டியளித்துள்ளார். 

ஏழு கூட இன்னும் நாலு சேர்த்தா வீட்டுலயே ஒரு கால்பந்து டீம் உருவாகிடுமே Mr.CR7!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!