ஸ்டான்ஃபோர்டு ஓப்பன் - மரியாவின் முதல் வெற்றி!

15 மாத தடைக்குப் பின் விளையாட வந்த ஷரபோவா அமெரிக்க மண்ணில் முதல் வெற்றி பெற்றுள்ளார்.  ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள மரியா ஷரபோவா கடந்த 2015-ம் ஆண்டில் ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டார். தடைக்குப் பின் ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் ஒப்பன் போட்டிகளில் பங்கேற்ற மரியா தோல்வியடைந்து வெளியேறினார். அதன் பின்னர்  காயம் காரணமாகப் போட்டிகளில் எதிலும் பங்கேற்காமல் இருந்தார். 

மரியா

அமெரிக்காவில் தற்போது தொடங்கியுள்ள ஸ்டான்ஃபோர்டு க்ளாசிக் (StanfordClassic) டென்னிஸ் போட்டியில் வைல்ட்கார்ட் முறையில் நேரடியாகப் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். முதல் போட்டில் ஜெனிபர் பிராடியுடன் மோதிய மரியா தடைக்குப்பின்னர் அமெரிக்க மண்ணில் முதல் வெற்றியை ஈட்டியுள்ளார். 

சொந்த மண்ணில் விளையாடிய பிராடியை "6-1" "4-6" "6-0" என்கிற செட்களில் தோற்கடித்தார். முதல் செட்டை மரியா வென்றிருந்த நிலையில் இரண்டாவது செட்டை பிராடி போராடி வென்றுவிடவே ஆட்டம் இரண்டாவது ரவுண்டுக்குச் சென்றது. அதில் இடைவிடாமல் மரியா 6 ஆட்டங்களைக் கைப்பற்றியதன் மூலம் வெற்றிபெற்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!