ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்ஸ்: இந்தியர்கள் கலக்கல்!

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

ஐசிசி

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா நான்காவது இடத்திலும் இந்திய கேப்டன் விராட் கோலி ஐந்தாவது இடத்திலும் தொடர்ந்து நீடித்து வருகின்றனர். 

டெஸ்ட் பௌலர்களுக்கான பட்டியலைப் பொறுத்தவரை, இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ளனர். இதில் அஷ்வின், மூன்றாவது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கையில் ரங்கன ஹெராத் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல ஆல்-ரவுண்டர்களுக்கான தர வரிசையில் ஷகிப் அல் ஹசன் முதல் இடத்திலும், ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!