'இப்போதைவிட 2005-ம் ஆண்டு உலகக் கோப்பைதான் எனக்கு ஸ்பெஷல்'- மித்தாலி ராஜ் சர்ப்ரைஸ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், சமீபத்தில் நடந்த உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை அணியை வழி நடத்திச் சென்றார். இதையடுத்து, அவர் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். இந்நிலையில், மித்தாலி ராஜ், 'எனக்கு இப்போதைவிட 2005-ம் ஆண்டு உலகக் கோப்பைதான் மிகவும் ஸ்பெஷலாக இருந்தது' என்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

மித்தாலி ராஜ்

இதுகுறித்து மித்தாலி மேலும், '2005-ம் ஆண்டும் நாங்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறினோம். ஆனால், அப்போது எங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லை. நாங்கள் பிசிசிஐ-யின் கீழும் அப்போது இல்லை. அரசும் எங்களுக்கு ஆதரவு தரவில்லை. எனவே, அப்போது இறுதிப்போட்டி வரை முன்னேறியது எனக்கு மிகவும் ஸ்பெஷலானது' என்றார்.

மேலும், தனது எதிர்கால கிரிக்கெட் பயணம் குறித்து மித்தாலி, 'அடுத்த ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை வருவதற்கு இன்னும் அதிக காலம் இருக்கிறது. அதைப்பற்றி இப்போது யோசிக்க முடியாது. எனவே, என் கவனம் அடுத்து வரவுள்ள 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில்தான் இருக்கப் போகிறது' என்று முடித்துக்கொண்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!