அவரைப் போல் ஒருவரைப் பார்க்கப் போவதில்லை - மெஸ்சி குறித்து உருகும் நெய்மர்

கால்பந்து உலகின் தற்போதைய சிறந்த மூன்று வீரர்களில் பிரேசிலின் முன்கள ஆட்டக்காரரான நெய்மரைச் சொல்லலாம். பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மர், இளம் வயதிலே அந்த அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு முன்னேற்றம் பெற்றார்.  

messi neymar


 25 வயதாகும் நெய்மர் தற்போது பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியில், நட்சத்திர ஆட்டக்காரரான மெஸ்சியுடன் இணைந்து விளையாடியது பார்சிலோனா ரசிகர்கள் தங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். இந்த இருவர் கூட்டணியைச் சமாளிக்க முடியாமல் எதிரணியின் தடுப்பு வியூகங்கள் தவிடு பொடியாவதை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. கடந்த சில நாள்களாக நெய்மர் பார்சிலோனா அணியைவிட்டு விலகப்போவதாகத் தகவல்கள் பரவியது. இந்நிலையில், நேற்று பி.எஸ்.ஜி கிளப் நெய்மரை தங்கள் அணிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்தது. இதற்காக 1,666 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. 
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு நெய்மர், பார்சிலோனா அணியுடனான தனது உறவு குறித்து உணர்வுபூர்வமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை சவால் நிறைந்தது. பார்சிலோனா அணி இந்தச் சவாலுக்கும் மேற்பட்ட சவால். நான் இளம் வீரராக அணிக்குள் நுழைந்தபோது, சிறுவயதில் வீடியோ கேமில் விளையாண்ட வீரர்களுடன் நேரில் விளையாடும் பாக்கியம் கிடைத்தது. தற்போது புதிய சவால்களை ஏற்க முடிவெடுத்தேன். அதனால், புதிய அணியைத் தேர்ந்தெடுத்துள்ளேன்" என்றார்.

நட்சத்திர வீரர் மெஸ்சி குறித்து கூறுகையில், "களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல நண்பர்களாக இருந்தோம். உங்களுடன் இணைந்து விளையாடியதைப் பெருமையாக நினைக்கிறன். எனது வாழ்நாளில் அவரைப் போன்ற சிறந்த வீரரை நான் பார்க்கப்போவதில்லை" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!