கொழும்பு டெஸ்ட்: 622 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்தியா!

கொழும்புவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில், இந்திய அணி 622 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

கொழும்பு டெஸ்ட்

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், தற்போது கொழும்புவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. நேற்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் புஜாரா மற்றும் ரஹானே சதம் அடித்து அசத்தினர்.


புஜாரா 133 ரன்கள், ரஹானே 132 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். இதனிடையே, இரண்டாம் நாள் ஆட்டத்திலும் இந்திய அணி சிறப்பாக பேட் செய்தது. சாஹா மற்றும் ஜடேஜா ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஜடேஜா 70 மற்றும் சாஹா 69 ரன்களில் வெளியேறினர். இதையடுத்து, இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.


இலங்கை அணி தரப்பில் ரங்கனா ஹெரத் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 2 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!