Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாதனை படைத்த இந்தியா - இங்கிலாந்து மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி நாட்டில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட மகளிர் விளையாட்டுப் போட்டி என்ற சாதனையைப் படைத்தது. 

இந்திய அணி

PIC: BCCI


லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியை இந்தியாவில் மட்டும் 1.95 கோடி பேர் தொலைக்காட்சி வாயிலாகக் கண்டுகளித்துள்ளனர். பார்க் (BARC) அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் இது. மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியை இந்தியாவில் 7 தொலைக்காட்சி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. இதில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு அம்சம் என்னவென்றால், நகரப் பகுதிகளில் வசிப்பவர்களைவிட கிராமப்புறங்களில் வசிக்கும் கிரிக்கெட் ரசிகர்களே இந்தப் போட்டியை அதிகம் கண்டுகளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அந்தப் போட்டியைக் கிராமப்புறங்களிலிருந்து 99.6 லட்சம் பேரும், நகர்ப் புறங்களிலிருந்து 95.71 லட்சம் பேரும் கண்டுகளித்துள்ளனர். தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாது, மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்த இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் ஸ்பெயின் மரின் மோதிய போட்டியை 1.73 கோடி பேர் தொலைக்காட்சியில் கண்டுகளித்ததே அதிகபட்சமாக இதுவரை இருந்துவந்தது.

- தினேஷ் ராமையா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement