Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

99 ரன்னில் ஜானி பேர்ஸ்டோ அவுட் இங்கிலாந்து 362 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது தென் ஆப்ரிக்கா. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், சாம்பியன்ஸ் டிராபி, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வந்திருந்தது. 

ஒருநாள் தொடர், சாம்பியன்ஸ் டிராபி, டி20 தொடர் என வரிசையாக தோல்வி மேல் தோல்வி சந்தித்துக்கொண்டிருந்த தென் ஆப்ரிக்க அணி டெஸ்ட் தொடரையாவது வென்று இங்கிலாந்துக்குப் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.  தென் ஆப்ரிக்கா 340 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியாக இரண்டாவது டெஸ்ட் மேட்ச்சை வென்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 239 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் அபாரமான வெற்றியைச் சுவைத்திருக்கிறது. இதன்மூலம் 2-1 என டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருக்கிறது. 

ஜானி பேர்ஸ்டோ

நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்றைய தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. குக் 46 ரன்களில் அவுட் ஆனார். கேப்டன் ரூட் 101 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். பென் ஸ்டோக்ஸ் 58 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை. எனினும் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ அருமையாக ஆடினார். அவர் 145 பந்துகளில் 14 பௌண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி 99 ரன்களில் அவுட் ஆனார். அவர் கேசவ் மகராஜ் பந்தில் எல்.பி முறையில் அவுட் ஆகி சோகமாக வெளியேறினார். அவர் அவுட் ஆனதும் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் 362 ரன்களில் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து பேட்டிங் பிடித்த தென் ஆப்ரிக்க அணி டீன் எல்கர் விக்கெட்டை  இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே இழந்தது. இரண்டாவது நாளில் உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட்டை இழந்து 12  ரன்களை எடுத்திருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement