வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (06/08/2017)

கடைசி தொடர்பு:10:17 (07/08/2017)

ரசிகர்களை ஏமாற்றிய போல்ட்; இறுதி ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் 16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பந்தயத்துடன் தான் ஒய்வு பெறப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார் மின்னல் மனிதன் உசேன் போல்ட்.

Bolt

நேற்று இரவு பலர் தூங்காமல், போல்டின் இறுதி ஓட்டத்தைக் காண காத்திருந்தனர். நேற்று இரவு நடந்த ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், சீறிப் பாய்வதற்குத் தயாராக இருந்தனர் போட்டியாளர்கள். ரசிகர்கள் பெருமளவில் போல்ட்டுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்தனர். 
தனது இறுதி ஆட்டத்தை தங்கப்பதக்கத்துடன் முடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் பந்தயத்தில் மூன்றாவதாக வந்து வெண்கலப் பதக்கத்துடன் ரசிகர்களை ஏமாற்றினார். பந்தயத்தில் அமெரிக்க வீரர் கட்லின் 100 மீட்டர் தூரத்தை 9.92 விநாடிகளிலும், அவரது சக நாட்டு வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 9.94 விநாடிகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர். தங்கம் வெல்வார் என்று உலகமே எதிர்பார்த்த போல்ட் 9.95 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். 

bOLT


வெற்றி பெற்ற கட்லின், தனது வெற்றியை போல்ட்டுக்கு அர்ப்பணிப்பது போன்று செய்தார். 35 வயதான கட்லின் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி நான்கு வருடம் விளையாடத் தடை பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகமே எதிர்பார்த்த போட்டியில் தோல்வி அடைந்தாலும், ரசிகர்கள் உசேன் போல்ட்டுக்கு சிறப்பான மரியாதையுடன் விடையளித்தனர்.