வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (06/08/2017)

கடைசி தொடர்பு:08:49 (07/08/2017)

கொழும்பு டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்தியா!

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் மூன்று  டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி அபாரமாக வென்றது. 

இந்தியா வெற்றி

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அருமையாக விளையாடி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்திய அணி. பின்னர், பேட்டிங் செய்த இலங்கை அணி வெறும் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஃ​பாலோ ஆன் தந்தார் கேப்டன் கோலி. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி முதல் விக்கெட்டை இழந்த பிறகு அதிரடியாக ஆடியது. குறிப்பாக இலங்கை தரப்பில் குசால் மெண்டிஸ் மற்றும் கருணரத்னே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர். இருப்பினும், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை தாண்ட முடியாமல் 10 விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை அணி.

ரவீந்திர ஜடேஜா

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கைக்கு எதிராக இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் ஒரு அரை சதமும் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.