நண்பர்கள் தினத்தில் கிரேட் காளியைச் சந்தித்த விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, WWE மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர் கிரேட் காளியைச் சந்தித்தார். 

Virat with kaali

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொழும்பில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி வென்றது. கொழும்பு டெஸ்ட் வெற்றிக்குப் பின்னர் இந்திய அணி தங்கியிருந்த ஹோட்டலில் கிரேட் காளியை, விராட் கோலி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை ட்விட்டரில் கோலி ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார். WWE மல்யுத்தப் போட்டிகளில் தி கிரேட் காளி என்றழைக்கப்படும் திலிப் சிங் ராணா பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் இருந்து WWE மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற முதல் நபர் என்ற பெருமைபெற்ற கிரேட் காளி 7 அடி ஒரு இன்ச் உயரமும், 157 கிலோ எடையும் கொண்டவர்.

-தினேஷ் ராமையா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!