Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெஸ்ட் தரவரிசை: ஆல்ரவுண்டர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்த ரவீந்திர ஜடேஜா

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்தார். 

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜடேஜா, ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசனை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார். கொழும்பு டெஸ்டில் 70 ரன்கள் குவித்த ஜடேஜா, 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதேபோல், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 51 வது இடத்துக்கு அவர் முன்னேறினார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மற்றொரு இந்திய வீரரான புஜாரா ஓர் இடம் முன்னேறி, 3 வது இடம்பிடித்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முன்னிலையில் உள்ள இந்தப் பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5வது இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 4வது இடத்திலும் இருக்கின்றனர். கொழும்பு டெஸ்டில் சதமடித்த ரஹானே 5 இடங்கள் முன்னேறி 6வது இடம் பிடித்தார். லோகேஷ் ராகுல் 2 இடங்கள் முன்னேறி 11வது இடம் பிடித்துள்ளார்.  

பந்துவீச்சாளர்கள் தரவரிசையைப் பொறுத்தவரை இந்திய வீரர் அஸ்வின் ஓர் இடம் பின்தங்கி 3வது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மற்ற இந்திய வீரர்களைப் பொறுத்தவரை முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 இடங்கள் முன்னேறி முறையே 20 மற்றும் 22வது இடம்பிடித்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement