பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் நியமனம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நஜம் சேதி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 


தற்போதைய தலைவரான சகாரியார் கானின் மூன்றாண்டுகள் பதவிக்காலம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைவராக நஜம் சேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளராகவும், சிறந்த கிரிக்கெட் நிர்வாகியாகவும் அறியப்படும் நஜம் சேதிக்கு எதிராகத் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. புதிய தலைவரைத் தேர்வு செய்யும் 10 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு, அவரை ஒருமனதாகத் தேர்வு செய்தது. ஐபிஎல் போன்று நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் தலைவராக அவர் தற்போது பதவி வகித்து வருகிறார். நஜாம் சேதியின் நியமனத்துக்கு அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக மூன்றாவது முறையாக நஜம் சேதி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த 2013 ஜூன் முதல் ஜனவரி 2014 வரையிலும், பிப்ரவரி 2014  முதல் மே 2014 வரையிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக அவர் பதவி வகித்தார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!