துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார் பேட்மின்டன் சிந்து! | P.V.Sindhu became the Deputy Collector

வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (09/08/2017)

கடைசி தொடர்பு:18:19 (09/08/2017)

துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார் பேட்மின்டன் சிந்து!

பேட்மின்டன் வீராங்கணை பி.வி.சிந்து இன்று ஆந்திரா மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.

பி.வி.சிந்து

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பெருமையை உலகுக்குச் சொன்னவர் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஆந்திரப் பிரதேச மாநிலம் சார்பாக குரூப்-1 பிரிவில், துணை கலெக்டராக விரைவில் நியமிக்கப்படுவார் என கடந்த மாதம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை கொல்லாபுடியில் உள்ள ஆந்திர தலைமைச் செயலகத்தில் துணை கலெக்டராக சிந்து பதவியேற்றார்.

முன்னதாக தெலுங்கானா அரசு அவருக்கு ரூ.5 கோடியும், ஃபிளாட் ஒன்றையும் வழங்கி இருந்தது. அதேபோல், ஆந்திர அரசு அவருக்கு
ரூ.3 கோடி வழங்கியது. மேலும் தற்போது ஆந்திர அரசு குரூப் 1 பிரிவின் அடிப்படையில் இந்த துணை கலெக்டர் பதவியை வழங்கியுள்ளது. உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான பி.வி சிந்து தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.