புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றி! | Tamil Thalaivas beats Bengaluru bulls in Pro Kabbadi

வெளியிடப்பட்ட நேரம்: 23:31 (10/08/2017)

கடைசி தொடர்பு:07:53 (11/08/2017)

புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றி!

புரோ கபடி லீக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது தமிழ் தலைவாஸ்.

தமிழ் தலைவாஸ்


புரோ கபடி லீக் இந்தாண்டு தமிழகத்துக்கு சற்று ஸ்பெஷலானது. சச்சினின் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்குகிறது என்றதுமே எதிர்பார்ப்புகள் எகிறியது. மொத்தம் இரண்டு பிரிவுகளாக இந்த சீசன் நடந்து வருகிறது. ஒரு பிரிவில் ஆறு அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் மல்லுக்கட்டுகின்றன.


தமிழ் தலைவாஸ் அணி குரூப் பி-யில் இடம் பெற்றுள்ளது. அந்த குரூப்பில் பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், தெலுகு டைட்டன்ஸ், பெங்கால் வாரியஸ், யு பி யோதா, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவைப் பொறுத்தவரை, பெங்களூரு அணி முதல் இடத்தில் உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி தெலுகு டைட்டன்ஸ் மற்றும் பெங்களூரு அணியுடன் போராடி தோல்வியடைந்தது.


இந்நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மீண்டும் மோதின. கடந்த போட்டிகளில் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்தப் போட்டியில் நல்ல திட்டமிடலுடன் களமிறங்கியது தமிழ் தலைவாஸ் அணி. இதனால் ஆரம்பம் முதலே பெங்களூரு அணிக்கு தண்ணி காட்டியது தமிழ் தலைவாஸ்.  இதையடுத்து, 29 - 24 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.


[X] Close

[X] Close