இலங்கையில் புதிய சாதனை படைக்குமா இந்திய அணி?

இலங்கை - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டியில் நாளை தொடங்குகிறது. 

இந்திய அணி


இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, கொழும்புவில் நடந்த 2 வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கண்டி பல்லகலே சர்வதேச மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இந்த டெஸ்டில் இந்திய அணி வென்றால், இலங்கை மண்ணில் இந்திய அணி பெறும் 9 வது வெற்றியாக அது இருக்கும். இதன்மூலம் இலங்கையில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த வெளிநாட்டு அணி என்ற சாதனையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி படைக்கும். அதேபோல, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன்முறையாக முழுமையாக (வொயிட் வாஷ்) வென்றும் இந்திய அணி வரலாறு படைக்கும். 


இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் புஜாரா, ரஹானே, தவான் மற்றும் விராட் கோலி எனப் பலமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி 600 ரன்களுக்கு மேல் குவித்தது. பந்துவீச்சில் ஜடேஜா இல்லாதது பின்னடவை ஏற்படுத்தினாலும், குல்தீப் யாதவ் அல்லது அக்‌ஷர் படேல் ஆகிய இருவரில் ஒருவர் அஸ்வினுடன் கைகோர்த்து கலக்கலாம். முகமது சமி, உமேஷ் யாதவ் ஆகியோர் தொடர் முழுவதும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். இலங்கை அணியைப் பொறுத்தவரை வீரர்கள் தொடர்ச்சியாகக் காயமடைந்து வருவது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. சுழற் பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத், வேகப்பந்துவீச்சாளர் நூவன் பிரதீப் மற்றும் மிடில் ஆர்டரில் வலுசேர்த்த அசேலா குணரத்னே ஆகியோரின் காயம், இலங்கை அணியைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!