ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகள்... 13 வயது சிறுவன் சாதனை!

இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒரே ஓவரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ராபின்சன்


இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் லூக்கா ராபின்சன். இவர் அங்கு 13 உட்பட்டோருக்கான கிளப் கிரிக்கெட்டில், பிலடெல்பியா கிரிக்கெட் கிளப் என்ற அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அங்கு மற்றொரு கிளப் அணிக்கு எதிரானப் போட்டி ஒன்றில், ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ராபின்சன். குறிப்பாக, ஆறு விக்கெட்டுகளுமே க்ளீன் போல்ட். ராபின்சனின் அதிரடி பந்து வீச்சால் அவரது அணி போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது.


ராபின்சனின் இந்த சாதனையை அவரது குடும்பத்தினர் அனைவரும் நேரில் பார்த்துள்ளது கூடுதல் ஸ்பெஷல். அதாவது, ராபின்சன் எடுத்த  ஆறு விக்கெட்களையும் பௌலர் எண்டில் அம்பயராக இருந்து பார்த்தவர் அவரது தந்தை ஸ்டீஃபன். ராபின்சனின் தாய் ஹெலன்தான் அந்தப் போட்டியின் ஸ்கோரை குறித்து வைத்துக் கொண்டிருந்தார். இதனால், ராபின்சன் நிகழ்த்திய சாதனையை குறித்து வைத்தது அவரது தாய்தான்.


மேலும், ராபின்சனின் தம்பி மேத்யூஸ் ஃபீல்டிங் செய்ய, அவர்களது தாத்தா க்ளென் பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்து இதைப் பார்க்க என்று ராபின்சன் குடும்பத்தினர் ஹேப்பியோ ஹேப்பி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!