Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று தொடங்குகிறது இறுதி டெஸ்ட் போட்டி! #INDvsSL

இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்தியா ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றி விட்ட நிலையில், இன்று மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து பல்வேறு வெற்றிகளைப் பெற்று வருகிறது. இன்றைய போட்டியைப் பொறுத்தவரை தொடரை வென்று விட்ட நிலையில் இந்திய அணிக்கு இது சம்பிரதாய போட்டிதான். ஆனால், கோலி எந்தப் போட்டியையும் அப்படி நினைக்க மாட்டார். அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. இந்திய அணியில், ஒரு போட்டியில் விளையாட தடை செய்யப்பட்ட ஜடேஜா இன்றைய போட்டியில் ஆட மாட்டார் என்பதால், அவருக்குப் பதிலாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வாய்ப்பு பெறுவார் என்று தெரிகிறது. இந்திய அணியின் பேட்டிங் பக்க பலமாக இருக்கிறது. கடந்த இரண்டு போட்டியிலும் 600 ரன்கள் மேல் குவித்து சிறப்பான நிலையில் உள்ளது. பந்துவீச்சைப் பொறுத்த வரை, உலகின் முதல் நிலை வீரரான ஜடேஜா இல்லாதது சற்று பின்னடைவுதான் என்றாலும், அஷ்வின், குல்தீப் யாதவ், சமி, உமேஷ்  யாதவ் போன்றவர்கள் இருப்பதால் இறுதி டெஸ்ட் போட்டியையும் வென்று சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அணியில் மிகப் பெரிய பிளஸ், தரமான ஆல்-ரவுண்டர்ஸ் அணியில் இருப்பதுதான். பாண்டியா மற்றும் அஷ்வின் சிறப்பாக பேட்டிங் செய்வது பேட்டிங்-க்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

இலங்கை அணியைப் பொறுத்த வரை, தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து இக்கட்டான நிலையில் இருந்து வருகிறது. ஜெயவர்தனே, சங்ககாரா போன்ற முன்னணி வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு நிலையான வீரர்கள் இல்லாமல் அந்த அணி தடுமாறுகிறது. உபுல் தரங்கா, கருணரத்தினே, சண்டிமல், மேத்தீஸ் போன்ற தரமான வீரர்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இவர்கள் சிறப்பாக விளையாடினால் அந்த அணி சரிவிலிருந்து மீளலாம். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரு பிரிவிலும் இந்திய அணி பலமாக இருப்பதால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் பல்லேகலே மைதானத்தில் வைத்து நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று காலை பத்து மணிக்கு தொடங்குகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement