இலங்கை டெஸ்ட்! ராகுல் புதிய சாதனை

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதமடித்த இந்திய வீரர் ராகுல், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார். 

கே.எல்.ராகுல்


பல்லகலே மைதானத்தில் நடந்துவரும் இந்தப் போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார். ரவீந்திர ஜடேஜாவுக்குத் தடை விதிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக ’சைனா-மேன்’ குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தொடக்கவீரர்களாக தவான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். தவான் ஒருமுனையில் அதிரடி காட்ட, மறுமுனையில் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் குவித்து விளையாடி வருகிறது.

தவான் 45 பந்துகளில் அரைசதமடித்தார். அவரைத் தொடர்ந்து அரை சதமடித்த கே.எல்.ராகுல், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7வது அரைசதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிகமுறை அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார். இந்தச் சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 5 வீரர்கள் படைத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸின் எட்வீக்ஸ், சந்தர்பால், ஜிம்பாப்வேயின் ஆன்டிஃபிளவர், இலங்கையின் சங்ககாரா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோரின் சாதனைகளை ராகுல் சமன் செய்தார். அதேபோல், பல்லகலே மைதானத்தில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையையும் தவான் - கே.எல்.ராகுல் ஜோடி படைத்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!