Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கை ஒருநாள் தொடர்: இந்திய அணி நாளை அறிவிப்பு

இலங்கை ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவிருக்கிறது. 


விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கண்டி பல்லக்கலே மைதானத்தில் இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. டெஸ்ட் தொடருக்குப் பின்னர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்படவிருக்கிறது. இதற்காக நடைபெறும் கூட்டத்தில் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, இலங்கைத் தொடரில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுவருகிறார். அவருடன் சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், பும்ரா ஆகியோரும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தம்பூலாவில் வரும் 20-ல் தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க கேப்டன் விராட் கோலி மறுப்புத் தெரிவித்ததாக வெளியான தகவலை, அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement