முதல் இன்னிங்ஸில் 135 ரன்களில் சுருண்ட இலங்கை..!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, கொழும்பில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது. கண்டி பல்லகலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது.

தவான் மற்றும் பாண்டியாவின் சதத்தால் இந்திய அணி 487 ரன்கள் என்ற வலுவான இலக்கை அடைந்தது. அடுத்து பேட் செய்த இலங்கை அணி 135 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக தினேஷ் சாண்டிமால் 48 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 15 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. கருணாரத்ன மற்றும் மலிண்டா புஷ்பாகுமாரா ஆகியோர் தொடர்ந்து ஆடிவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!