வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (15/08/2017)

கடைசி தொடர்பு:16:41 (15/08/2017)

இலங்கையில் தேசியக் கொடியேற்றிய விராட் கோலி

நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கையில் கொண்டாடினர். 

சுதந்திர தினம் கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணியினர்.

புகைப்படம்: பிசிசிஐ


விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முதல்முறையாக வொயிட் வாஷ் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. நாட்டின் சுதந்திர தினத்தை கண்டியில் இந்திய வீரர்கள் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியின்போது தேசியக் கொடியை கேப்டன் விராட் கோலி ஏற்றினார். இதில், தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 15 பேர் கொண்ட இந்திய அணி மற்றும் துணைப் பயிற்சியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். தேசியக் கொடி ஏற்றிய பின்னர் தேசிய கீதம் பாடி அவர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடினர். டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தம்பூலாவில் வரும் 20-ம் தேதி நடக்கிறது.