டெஸ்ட் தர வரிசை: டாப் 10-ல் நுழைந்த கே.எல்.ராகுல்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தர வரிசைப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இதில், சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில், இந்திய தொடக்க வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் முதன்முறையாக 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ராகுல் மற்றும் தவான்

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலாவதாக நடந்த டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்து இந்தியா சாதனை புரிந்தது. இதற்கு பெருந்துணையாக இருந்தது, இந்தியாவின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான். இருவரும் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக ரன்கள் எடுத்ததால், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். ராகுல் 9-வது இடத்துக்கும், இந்தத் தொடரின் நாயகனான தவான் 10 இடங்கள் முன்னேறி 29-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

பௌலர்களைப் பொறுத்தவரை, இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து நம்பர்-1 இடத்திலேயே நீடித்துவருகிறார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!