வெளியிடப்பட்ட நேரம்: 08:22 (16/08/2017)

கடைசி தொடர்பு:08:22 (16/08/2017)

சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் சார்பாக போட்டியிடும் ராம்குமார் ராமநாதன், 2-வது சுற்றுக்கு முன்னேறி யுள்ளார்.

ராம்குமார் ராமநாதன்


அமெரிக்காவின் சின்சினாட்டி மாகாணத்தில், சின்சினாட்டி  ஓப்பன் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், முதல் சுற்றில் அமெரிக்காவின் கிறிஸ்டோபர் இபேங்க்ஸை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த முதல் சுற்றின் முதல் செட்டில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் ஆட்டமிழந்தார். முதல் செட்டை 6-7 என்ற கணக்கில் இழந்தார். ஆனால், இரண்டாவது செட்டில் தன்னுடைய கடுமையான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். இதன்மூலம் இரண்டாவது செட்டை 6-1 என்ற கணக்கில் அபாரமாக ஆடி வென்றார்.

பின்னர், வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் போட்டியில், அமெரிக்க வீரர் கொடுத்த கடும் நெருக்கடியையும் தாண்டி 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் முதல் சுற்றை இந்தியா கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

சர்வதேச அளவிலான டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் இந்தியாவின் நம்பர்1. வீரராக முன்னேறிவருகிறார், தமிழகத்தின் ராம்குமார் ராமநாதன்.