பவுன்சர் பந்து தாக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மரணம்

பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் பேட்டிங் செய்துகொண்டிருந்த ஜுபைர் அகமது என்ற வீரர், பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்தார். 

கிரிக்கெட் வீரர் ஜுபைர் அகமது


கைபர் பதுன்க்வா மாகாணத்தின் மர்தான் மாவட்டத்தைச் சேர்ந்த ஜுபைர் அகமது, பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான பஹர் ஜமனின் கிரிக்கெட் அகாடமியைச் சேர்ந்தவர். கிளப் அணிகள் இடையிலான போட்டியின்போது ஹெல்மெட் அணியாமல் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டதால், அவர் உயிரிழக்க நேரிட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவுசெய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் விளையாட்டின்போது பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை நினைவுபடுத்தி இருப்பதாகவும், ஜுபைரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி கிரிக்கெட் வர்ணணையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான டீன் ஜோன்ஸ், தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியினரின் பயிற்சிப் போட்டியின்போது இதேபோல பவுன்சர் பந்து தாக்கியதில் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த அந்த போட்டியின் போது காயமடைந்த வார்னர், உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!