வெளியிடப்பட்ட நேரம்: 01:20 (17/08/2017)

கடைசி தொடர்பு:09:05 (17/08/2017)

என்ன சொல்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா?

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ரோஹித் ஷர்மா, ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் ஷர்மா

இதுகுறித்து பேசிய ரோஹித், 'இந்திய கிரிக்கெட் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமைக்குரியது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணியில் இடம்பிடித்து, விளையாட வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். ஆனால், இப்போது துணை கேப்டன் பதவி வரை உயர்ந்திருப்பது, பெருமைக்குரிய ஒன்றாகும். நான் முதன்முறையாக இந்திய துணை கேப்டனாகக் களம் இறங்கும்போது, சில திட்டமிடல்களுடனும் இலக்குகளுடனும் இருப்பேன். துணை கேப்டனாக களம் இறங்க மிகவும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ரோஹித் ஷர்மா, பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல் அணிக்கு கேப்டனாக தலைமைதாங்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணிக்கு எதிராக, வரும் 20-ம் தேதி இந்திய அணி விளையாடப்போகும் போட்டியில்தான் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் துணை கேப்டனாக களம் இறங்க உள்ளார்.