'ஆஸ்திரேலிய அணியில் இவருக்கு இடம் உண்டு!'- ஆரூடம் சொல்லும் மைக் ஹஸ்ஸி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி, 'மேக்ஸ்வெல்லுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது' என்று கூறியுள்ளார்.

Mike Hussey

'மிஸ்டர் கிரிக்கெட்' என்று புகழப்பட்டவர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹஸ்ஸி. கடந்த 2013-ம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். லேட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹஸ்ஸி, ஆஸ்திரேலிய அணிக்காக 6-வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கி அதிகம் சாதித்தவர். ஆனால், அவரின் ஓய்வுக்குப் பிறகு அந்த அணிக்கு, சிறந்த 6-வது பேட்ஸ்மேன் அமையவில்லை. இந்நிலையில் ஹஸ்ஸி, 'மேக்ஸ்வெல்லுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் 6-வது இடத்தை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ளும் திறமை இருக்கிறது. தற்போது வரும் வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அதிக ரன்கள் எடுத்து தனது இடத்தை மேக்ஸ்வெல் உறுதிசெய்ய வேண்டும். அவர் அதிக ரன்கள் எடுக்கும்பட்சத்தில், ஆஷஸ் தொடரில் அவரை உட்காரவைப்பது கடினமாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

மேக்ஸ்வெல் கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்திருந்தாலும், 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டும்தான் விளையாடியுள்ளார். 2017-ம் ஆண்டுதான் தனது முதல் சதத்தையும் அடித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!