சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ்: சானியா ஜோடி அபார ஆட்டம்!

சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் சார்பாக போட்டியிடும் சானியா மிர்சா, மகளிருக்கான இரட்டையரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சானியா மிர்சா

அமெரிக்காவின் சின்சினாட்டி மாகாணத்தில், சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியாவின் சானியா மிர்சா மகளிருக்கான இரட்டையரில், சினாவின் பெங் ஷூவாய் உடன் இணைந்து விளையாடினார். காலிறுதியில் சானியா- ஷூவாய் ஜோடி ரோமானியாவின் இரினா கேமலியா பெகு - ராலுகா ஒலரு ஜோடியை எதிர்த்துப் போட்டியிட்டு விளையாடினர். விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் சுற்றில், சானியா ஜோடி 6-4 என்ற செட் கணக்கில் முதல் சுற்றைக் கைப்பற்றியது.

தொடர்ந்து அபாரமாக ஆடியபோதும், இரண்டாவது செட்டை சானியா ஜோடி 6-7 என்ற செட் கணக்கில் பறிகொடுத்தது. இறுதிச் சுற்றான, அரையிறுதியில் ஜோடியைத் தீர்மானிக்கும் சுற்றில், இரு தரப்பினரும் அபாரமாக ஆடியதால் போட்டியின் விறுவிறுப்பு கூடியது. இறுதியாக சானியா- ஷூவாய் ஜோடி 10-3 என்ற செட் கணக்கில் அபார வெற்றிபெற்று சுற்றைக் கைப்பற்றி, அரையிறுதிக்கும் முன்னேறினர்.

இதேபோல, ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் ரோகன் போபண்ணா - இவான் டோடிக் ஜோடி, ஜூவான் கேபல் - பேபியோ போக்னினி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியின் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் போபண்ணா ஜோடி இழந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில், போபண்ணா ஜோடி 7-5 என்ற செட் கணக்கில் வென்றது. மூன்றாவது சுற்றிலும் 10-8 என்ற செட் கணக்கில் வென்ற போபண்ணா - டோடிக் ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!