வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (18/08/2017)

கடைசி தொடர்பு:12:09 (18/08/2017)

பல்கேரியா ஓப்பன் பேட்மின்டன்: இந்தியா அபார வெற்றி!

பல்கேரியா ஓப்பன் பேட்மின்டன் தொடரில், இந்தியாவின் லக்‌ஷயா சென் அபாரமாக ஆடி பட்டத்தைக் கைப்பற்றினார்.

பேட்மின்டன்

பல்கேரியாவின் சோபியா நகரில், பல்கேரியன்  ஓப்பன் பேட்மின்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், ஆண்களுக்கான ஜூனியர் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் லக்‌ஷயா சென், தன்னுடைய இறுதிச்சுற்றில் குரோசியாவின் ஜொன்னிமிர் டர்கின்ஜாக்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இறுதிச்சுற்றின் முதல் செட்டில், இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-18 என்ற கணக்கில் ஆட்டம் இழந்தார். ஆனால், இரண்டாவது செட்டில் தன்னுடைய கடுமையான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். இதன்மூலம் இரண்டாவது செட்டை 21-12 என்ற கணக்கில் அபாரமாக ஆடி வென்றார்.

இதன்மூலம் வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிச்சுற்றின் இறுதி செட்டில் தன் நிலையை உணர்ந்த பின்னர், தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார் லக்‌ஷயா சென். ஜொன்னிமிர் டர்கின்ஜாக்கிற்கு எதிரான செட்டை 21-17 என்ற கணக்கில் வென்று தொடரையும் கைப்பற்றினார். இதன்மூலம் பல்கேரியா ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஜூனியருக்கான பட்டத்தைக் கைப்பற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார், லக்‌ஷயா சென்.

பல்கேரியன் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஜூனியர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷியா சென் வெற்றி பெற்று சாம்பியம் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

பல்கேரியன் ஓபன் பேட்மின்டன் தொடர் போட்டிகள் பல்கேரியாவின் சோபியா நகரில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இறுதிப்போட்டிகள் நேற்று (17-ம் தேதி) நடைபெற்றன.

இத்தொடரின் ஜூனியர் ஆடவர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த முதல்நிலை வீரரான லக்‌ஷியா சென் தகுதிப் பெற்றார். 57 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டியில் இரண்டாம் நிலை வீரரான குரோசியாவின் ஜொன்னிமிர் டர்கின்ஜாக், லக்‌ஷியா சென் எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முதல் சுற்றை 21-18 என்ற புள்ளிக்கணக்கில் டர்கின்ஜாக் கைப்பற்றினார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட லக்‌ஷியா சென் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டினார். இரண்டாவது சுற்றை 21-12 என்ற புள்ளிக்கணக்கில் லக்‌ஷியா  கைப்பற்றினார். இதன்மூலம் வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிச்சுற்றுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இறுதிச் சுற்றையும் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 21-17 என்ற புள்ளிக்கணக்கில் லக்‌ஷியா வென்று ஜூனியர் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.