'இந்தியாவை ஜெயிப்பது கடினம்!'- ஆஸ்திரேலிய அணியை எச்சரிக்கும் கிளார்க்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விரைவில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்களை  விளையாட உள்ளனர். இதையொட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க், 'இந்தியச் சுற்றுப் பயணம் ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. இந்திய அணியை ஜெயிப்பது கடினமாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.

Michael Clarke

அவர் மேலும், 'விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீப காலமாக களத்தில் நன்றாக செயல்பட்டு வருகின்றது. இந்தியாவிலும் சரி வெளிநாடுகளிலும் சரி, அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கூடிய சீக்கிரத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வரப் போகிறது. அவர்கள் நன்றாக விளையாடி வெற்றிகளைக் குவிப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால், அது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது' என்று ஆருடம் சொல்லியுள்ளார்.

வரும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி இந்தியாவுக்கு வரும் ஆஸ்திரேலிய அணி, அக்டோபர் 11-ம் தேதி வரை இங்கே சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் விளையாட உள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!