வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (20/08/2017)

கடைசி தொடர்பு:10:22 (21/08/2017)

216 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி..!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 


இந்திய இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தம்புல்லாவில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். குணதிலகா 35 ரன்களில் சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய டிக்வெல்லா 64 ரன்களைக் குவித்தார். அடுத்தடுத்து களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர்.  அதனால் இலங்கை அணி 43.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அக்‌சர் பட்டேல் 3 விக்கெடுகளையும், ஜாதவ், சாஹல், பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.