’தொப்பி வடிவில் மைதானம்’... உலகக் கோப்பைக்குத் தயாராகும் கத்தார்

2022-ம் ஆண்டு, பிஃபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் கத்தாரில் நடக்க இருக்கிறது. 

அரேபியத் தொப்பி வடிவிலான மைதானம்.


தீவிரவாதத்துக்கு கத்தார் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் கத்தார் உடனான உறவை முறித்துக்கொண்டுள்ளன. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இது ஒரு புறமிருக்க, 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடருக்கான முன்னேற்பாடுகளை கத்தார் நாடு தொடங்கியுள்ளது. 


அதன் ஒருபகுதியாக, அரேபியத் தொப்பி வடிவிலான கால்பந்து மைதானத்தை அமைக்க இருப்பதாக கத்தார் அறிவித்துள்ளது. தலைநகர் தோஹாவில் அமைக்கப்பட இருக்கும் அல் துமாமா மைதானம், பாரம்பர்ய ’காஃபியா’ எனப்படும் அரேபியத் தொப்பி வடிவில் அமைய இருக்கிறது. சுமார் 40,000 பேர் வரை அமரக்கூடிய வகையில் உருவாக இருக்கும் இந்த மைதானம், கத்தாரைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களை ஒன்றிணைக்கும் சின்னமாக இந்த மைதானத்தை அரேபியத் தொப்பி வடிவில் அமைக்க இருப்பதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஹஸன் அல் தவாடி தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!