சர்வதேச அளவில் தொடர் வெற்றிகள்: முன்னணியில் இந்தியக் கால்பந்து அணி!

சர்வதேச அளவில் தொடர் வெற்றிகளைப் பதிவுசெய்து சாதனை படைத்துவருகிறது, இந்தியக் கால்பந்து அணி.

இந்தியக் கால்பந்து அணி

கோப்புப் படம்

இந்தியக் கால்பந்து அணி தற்போது  மொரீஷியஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் அணிகளுடனான முத்தரப்புத் தொடரில் விளையாடிவருகிறது. இந்தத் தொடரில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி மொரீஷியஸ் அணியை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய அணி, ஆட்டத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த வெற்றியின்மூலம் சர்வதேச அலவிலான போட்டிகளில் தன்னுடைய தொடர்ச்சியான எட்டாவது பெரிய வெற்றியைப் பதிவுசெய்தது இந்திய அணி.

முன்னதாக, 1962-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஏழு சர்வதேச வெற்றிகளைப் பதிவுசெய்ததே இந்திய அணியின் சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், 53 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியக் கால்பந்து அணியின் இப்புதிய சாதனை பல்வேறு தரப்புகளிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

தற்போது நடந்துவரும் இந்த முத்தரப்புத் தொடரில், வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அணிகளுக்கு எதிராக இந்திய அணி பங்குபெற உள்ளது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!