டெல்லி டான்களை வீழ்த்திய சென்னை ஸ்ட்ரைக்கர்ஸ்

ஸ்னூக்கர் விளையாட்டின் இந்தியன் கியூ மாஸ்டர்ஸ் போட்டியின் லீக் தொடரில், ’டெல்லி டான்ஸ்’ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது, ‘சென்னை ஸ்ட்ரைக்கர்ஸ்’ அணி.

பங்கஜ் அத்வானி

இந்தியன் கியூ மாஸ்டர்ஸ் போட்டியின் லீக் தொடர், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இந்த முதல் சீசன் போட்டியின் லீக் தொடரில், நேற்று சென்னை ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, டெல்லி டான்ஸ் அணியை எதிர்கொண்டது. வெவ்வேறு பிரிவுகளில் விளையாடிய இந்த இரு அணிகளில், ‘சென்னை ஸ்ட்ரைக்கர்ஸ்’ அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகக் களமிறங்கினார் பங்கஜ் அத்வானி. 16 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானி உள்ள சென்னை ஸ்ட்ரைக்கர்ஸ் அணியே போட்டியில் வெற்றிபெற்றது.

ஆடவர் ஒற்றையரில் பங்கேற்ற பங்கஜ் அத்வானி, டெல்லி அணியின் கெல்லி பிஸ்சர் என்பவரை எதிர்கொண்டார். இதில் 32-19, 26-6 என்ற அபார வெற்றிபெற்றார் பங்கஜ். அடுத்ததாக, இரட்டையர் பிரிவில் வித்யா பிள்ளையுடன் இணைந்து விளையாடிய பங்கஜ் 20-5, 22-18 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி அணியின் கெல்லி பிஸ்சர் - மனன் சந்திரா ஜோடியை வீழ்த்தினார். இதேபோல, சென்னை அணியின் தர்மேந்தர் லில்லி, வித்யா பிள்ளை உள்ளிட்ட ஒட்டுமொத்த அணியினரும் பல்வேறு பிரிவுகளிலும் தங்கள் வெற்றியைப் பதிவுசெய்தனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!