வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (21/08/2017)

கடைசி தொடர்பு:12:40 (21/08/2017)

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: பதக்க வேட்டைக்குத் தயாராகும் இந்தியா!

சர்வதேச அளவில் நடைபெறும் 23-வது உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் இன்று தொடங்குகிறது.

பேட்மின்டன்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்,  இன்று தொடங்கவிருக்கும் 23-வது உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர், வரும் ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் மொத்தம் 21 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். 

பேட்மின்டன் ஆண்களுக்கான போட்டிகளில், ஆஸ்திரேலிய ஓப்பன், இந்தோனேஷிய ஓப்பன் எனத் தொடர் பட்டங்களைக் கைப்பற்றி வரும் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஒலிம்பிக் நட்சத்திரங்களான சாய்னா நேவால், பி.வி.சிந்து என முன்னணி இந்திய வீரர்கள் நம்பிக்கை நட்சத்திரங்களாக இப்போட்டியில் களம் இறங்குகின்றனர். மேலும், அஜய் ஜெயராம், சாய் பிரனீத், சமீர் வர்மா, அஜய் ஜெயராம் எனப் பல முன்னணி இந்திய பேட்மின்டன் வீரர்கள் விளையாட உள்ளனர்.

சர்வதேச அளவிலான பேட்மின்டன் தொடரில், இந்தியா இதுவரை பெரிய அளவிலான சாதனை புரியவில்லை என்றாலும், சமீபகாலமாக இந்திய அணி பெற்றுவரும் பட்டங்கள், இந்த சாம்பியன்ஷிப் தொடரிலும் எதிரொலிக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.