வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (21/08/2017)

கடைசி தொடர்பு:14:55 (21/08/2017)

ஐந்து மணி நேர தொடர் ஸ்டன்ட்: சென்னையில் நடந்த ஒரு சாகச விழா!

சாதனைக்காக பைக் ரேஸர்கள் ஒன்றிணைந்து, ஐந்து மணி நேரம் தொடர் பைக் ஸ்டன்ட் சாகசங்கள் நிகழ்த்தினர்.

பைக் ஸ்டன்ட்


இந்தியாவிலேயே முதன்முறையாக இடைவெளியின்றி தொடர்ந்து நீண்ட நேரம் நடத்தப்பட்ட ஸ்டன்ட் சாகச நிகழ்ச்சி, சென்னை ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ’ மாலில் நடைபெற்றது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் இருக்கும் டிவிஎஸ் நிறுவனம், இந்தச் சாதனை நிகழ்ச்சியைத் தன் அணியினருடன் மேற்கொண்டது. டிவிஎஸ் நிறுவனத்தின் ’டி.வி.எஸ் அபாச்சி ப்ரோ பெர்ஃபார்மன்ஸ் X' குழுவினர், அப்பாச்சி RTR 180 மற்றும் அப்பாச்சி RTR 200 4V எனத் தன் முன்னணி அடையாளமான அப்பாச்சி ரக பைக்குகளில் ஸ்டன்ட் குழுக்கள் களமிறக்கப்பட்டனர். டெல்லி, இந்தூர், ஜெய்பூர், பெங்களூரு, கோவை ஆகிய நகரங்களிலிருந்து பங்கேற்ற பைக் சாகச வீரர்கள் ஜீசஸ் போஸ், பில்லியன் த்ரில் ரைடு, 360 டிகிரி ஸ்டன்ட், ஃப்ரன்ட் வீலீ, சின்க்ரனைஸ்டு ஃப்ளவர் பர்ன் அவுட், சூசைட் பர்ன் அவுட் எனப் பல ஸ்டன்ட்டுகளைத் தொடர்ச்சியாக ஐந்து மணி நேரம் நிகழ்த்தினர்.

இந்த சாகச நிகழ்ச்சிகுறித்து ஒருங்கிணைப்பாளர் விஜய் சோக்கோ கூறுகையில், ”அப்பாச்சி, டிவிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய அடையாளம். இந்தியாவின் முதல் அங்கீகரிக்கப்பட்ட ரேஸிங் அணி என்ற பெருமைகொண்ட டிவிஎஸ் ரேஸிங், ரேஸிங்-கை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஸ்டன்ட் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்தது. பல முக்கிய நகரங்களில் பைக் ரேஸிங், பைக் ஸ்டன்ட்களுக்கு இல்லாத வரவேற்பு சென்னையில் உள்ளது. அதனாலேயே, பைக் ஸ்டன்ட் சாகச நிகழ்ச்சியை சென்னையில் மக்கள் அதிகமாகக் கூடும் ’எக்ஸ்பிரஸ் அவென்யூ’ மாலில் நடத்த ஏற்பாடுசெய்தோம். எங்களின் இந்த முதல் முயற்சியை ’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அங்கீகரித்துள்ளது” என்றார்.