'தோல்விகள்தான் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்தன!'- மனம் திறந்த தவான்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், 'நான் தற்போது சிறப்பாக விளையாடுவதற்கு முன்னர் சந்தித்த தோல்விகள்தான் காரணம்' என்று உருகியுள்ளார்.

தவான்

சமீப காலமாக ஐ.சி.சி நடத்திய உலகக் கோப்பை தொடர்களில், அதிக ரன்கள் ஸ்கோர் செய்யும் நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர், ஷிகர் தவான். ஆனால், அதைத் தவிர்த்துப் பார்த்தால், அவர் சிறப்பாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், அதைத் தவிடுபொடியாக்கும் விதத்தில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சதங்கள் அடித்துவருகிறார் தவான்.

இதுகுறித்து தவான், 'நான் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். அதுவே என் இலக்காக இருக்கும். நான் தோல்விகளையும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டே பயிற்சி பெறுவேன். அப்போது, எனது அடிப்படைத் திறமைகள்மீது மட்டும்தான் கவனம் இருக்கும். நான் நன்றாக விளையாடும்போதும் என் திறமைகள் மீதுதான் கவனம் செலுத்துவேன். தோல்விகள் நமக்கு அதிகப் பாடம் புகட்டும் என்று நினைக்கிறேன். தோல்விகளிலிருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டேன். என் சிறப்பான ஆட்டத்துக்கும் அதுவே காரணமாகவும் இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!