இந்திய அணியின் பலே ஆட்டத்துக்குக் காரணம் என்ன? - புஜாரா பதில்

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் என்று அனைத்திலும் வெற்றிகளைக் குவித்துவருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளின் வெற்றிக்குக் காரணம் என்ன என்பதற்கு, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் செத்தேஷ்வர் புஜாரா பதிலளித்துள்ளார். 

புஜாரா

'டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றிக்கு, அணியின் ஒவ்வொருவரும் துணைபுரிந்துள்ளனர். பேட்டிங்கைப் பொறுத்தவரை, பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். டாப் ஆர்டர் நன்றாக விளையாடினால், 400 ரன்களுக்கு மேல் சுலபமாக எடுத்துவிடுவோம். அதுவே, பாட்டம் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினால், 600 ரன்களுக்கு மேல் அடித்துவிடுவோம். 400 ரன்களுக்கும் 600 ரன்களுக்கும் இருக்கும் வித்தியாசம் மிக அதிகம். நீங்கள் 600 ரன்களுக்கு மேலே எடுத்துவிட்டால், எதிரணி ஆரம்பத்திலிருந்தே அழுத்தத்தில் இருக்கும். தொடர் வெற்றிக்கு, ஓர் அணியாக அதிக ரன்கள் எடுத்ததும் முக்கியக் காரணம். அது மட்டுமன்றி, அணியிலிருக்கும் 11 பேரை தவிர்த்து, பெவிலியனில் விளையாடாமல் தனது வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் வீரர்களில் திறமையானவர்கள் மிக அதிகம். அப்படி அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், சிறப்பாகவே செயல்படுகின்றனர். அதேபோல, வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர்' என்று விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!