'எங்களை வீழ்த்துவது கடினம்!'- ஆஸ்திரேலியாவுக்கு சவால்விடும் ஷகிப் அல் ஹசன்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வங்க தேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், 'எந்த அணியாக இருந்தாலும் எங்களை சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம்' என்று கூறியுள்ளார்.

Shakib Al Hasan

 மேலும், 'எங்களால் எந்த அணியையும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள தொடர்ச்சியாக நாங்கள் வெற்றிபெற்றால் மட்டுமே முடியும். இப்போது எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையால், சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினம். எங்களுக்கு எதிராக யார் விளையாடுகிறார்கள் என்பதுகுறித்து கவலையில்லை. எந்த அணியாயினும் எங்களை வீழ்த்துவது கடினம்' என்று தெறிப்பாகப் பேசியுள்ளார்.

இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி, வங்க தேசத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதன் பின்னர், இப்போதுதான் இந்த இரு அணிகளும் சந்திக்கின்றன. ஆகவே, இப்போது வங்க தேசத்தில் இருக்கும் வீரர்கள் யாவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!